பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆசிரியரின் சிறு வரலாற்றுக் குறிப்பு, ஆசிரியரைப்பற்றிய பாராட்டுக்கள், அவர் பாடல்களுள் சில சிறந்த பகுதிகள், ஆவர் கையெழுத்து, அவரது புகைப்படம் முதலியவை இருக்கும். இவ்வளவும் எல்லாத் தொகை நூல்களிலும் - எல்லாப் பாடல்களிலும் இருப்பதில்லை. இச் சிறப்புக்களுள் চঙ্গে சிலவற்றை ஒரு சில தொகை நூல்களிலும், வேறு சில வற்றை வேறுவேறு தொகை நூல்களிலுமாக மாறி மாறிக் கண்டு மகிழலாம். தனித்தனிப் பிரெஞ்சுத் தொகை நூல்களின் மாதிரிக் காக, சில தொகை நூல்களைப் பற்றிச் சிறிது சிறப்பாக ஈண்டுக் காண்போம் : 1. ANTHOLOGIE DE, LA POESIE LYRIQUE EN FRANCE -- இந்த நூலுக்கு, பிரெஞ்சு உணர்ச்சிப்பாடல் தொகை நூல்" என்னும் பொருளில் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்து உருவாக்கித் தந்தவர், "ழோர்ழ் guurrGuoso” (Georges Duhamal) &rairspruh அறிஞர். 1946ഷ്ട്. ஆண்டில் இது பாரிசில் அச்சிடப்பட்டது. இதில், வில்லான்' (Willon : 1413 - 1489) என்னும் பாவலர் முதல். “Gurr@zGevri" (Baudelaire : 1821 - 1867) என்னும் பாவலர் தருக உள்ள 113 பாவலர்களின் பாடல்கள் தொகுக்கப்பட் டுள்ளன. 571 பக்கங்கள் கொண்ட இந்நூலின் முகப்பில், 35 பக்கங்கள் கொண்ட நீளமான முன்னுரை யொன்றுள்ளது. தொகுப்பாசிரியர், தமது முன்னுரையில், “பூமாலே போன்ற தான இந்தப் பாமாலையை, மக்களின் பொழுதுபோக்குப் பசிக்காக நான் தொகுக்கவில்லை. படிப்பவர்கள், பாடல் ஆசிரியரின் உள்ளத்தோடு ஒன்றி ஈடுபட்டுப் பாட்டைச் சுவைக்க வேண்டும் என்னும் நோக்குடனேயே தொகுத்தேன். குறிப்பிட்ட ஆசிரியர்களின் பாடல்களுள் சிறந்த பாடல் களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதோடு நின்று விடாமல், Η JGύ நூல்களையும் படித்துப் பல்வேறு சுவையுணர்வூட்டும் பாடல்கள் பலவற்றையும் யான் இதில் தொகுத்துள்ளேன். பிரெஞ்சுத் தொகை நூல்கள் .57 இத் தொகுப்பைப் பற்றிச் சிலர் நிறையும் சிலர் குறையும் கூறுகின்றனர். இன்னும் சில வகைப் பாடல்களேச் சேர்த் திருக்கலாம் என்பது சிலரது கருத்து. இப் பாடல்களி லிருந்து சிலவற்றை விலக்கிவிட்டிருக்கலாம் என்பது மற்ருெரு சாரார் கருத்து. இதுபற்றியெல்லாம் யான் கவலை கொள்ள வில்லை. இயன்றவரை பலருக்கும் பயன்படும் அளவில் இந் நூலைத் தொகுத்தேன்....' இல்வாருகப் பல கருத்துக்களைத் தொகுப்பாசிரியர் தமது முன்னுரையில் சொல்லிக்கொண்டு செல்கிரு.ர். - . இத் தொகை நூல் அமைப்பின் மாதிரிக்காக, முதல் புலவர். இறுதிப் புலவர் ஆகியோரின் பெயர்கட்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள் வருமாறு : முதற் புலவர் : VILLON Francois de Montcorbier, alias des Loges, plus connu sous le nom de Francois Villon; ne a Paris en 1431 - more •en 1489. “Le reste des...............que jamais” (9 வரிகள் தரப்பட்டுள்ளன) CLEMENT MAROT (Avertissement aux jecteurs des poesies de Villon.) மேலுள்ள பிரெஞ்சுப் பகுதியின் கருத்து வருமாறு : இந்தப் பாடல் ஆசிரியரின் பெயர் வில்லான்’ என்று கூறினால் அனைவரும் நன்கு அறிவர். இவரே, ஃபிரான்சுவா தெ மோன்த் கொர்பியர், லோழ்' என்னும் பெயர்களாலும் குறிப்பிடப்படுவார். இவர் பாரிசில் கி. பி. 1431 - இல் பிறந்தார்; 1489 -இல் இறந்தார். " வில்லோன் பாடல்களைப் படிப்பவர்க்கு எச்சரிக்கை' என்னும் பொருள்பற்றி "8)an torrasi ut,Girrr ( Clement Marot) என்பவர் ஒன்பது வரிகள் கொண்ட ஒரு பாடல் எழுதி, இவரது பாடல்களின் அருமையைப் புலப்படுத்தியுள்ளார்.

  • ஃபிரான்சுவா