பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆங்கிலத் தொகை நூல்கள் கிரீக் மொழியில் கி. மு. முதல் நூற்ருண்டிலேயே, முதல் தொகைநூல் தொகுக்கப்பட்டது. எனினும், இன்று அனைத்துலகப் பொது மொழியாக ஆட்சி செலுத்திவரும் ஆங்கிலத்தில், பதினரும் நூற்ருண்டின் இடைப்பகுதியில் தான் முதல் தொகை நூல் வெளியாயிற்று. 1320-இல் எழுதப்பட்ட "Harely Manuscript என்னும் கையெழுத்துப் படியில், பிரெஞ்சுப் ~, பாடல்களுடன் பல ஆங்கிலப் ப ா ட ல் க ளு ம் இருந்தது உண்மை. 1375 -இல், சோலொமொன்’ (Solomon) என்பவர், இலத்தீன் பிரெஞ்சுப் பழமொழிகளுடன் ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து வெளியாக்கியதும் உண்மை. ஆயினும், சிறந்த ஆங்கிலப் பாடல்கள் முதலமுதலாகத் தனித்த நிலையில் - தனித் தொகைநூலாகத் தொகுக்கப்பட்டு வெளியானது பதினரும் நூற்ருண்டின் இடைப்பகுதியிலேதான். கி. பி. 1557-இல், "டாட்டல்" (Tottel) என்னும் அறிஞர் ஆங்கிலப் பாடல்கள் usual fibso sp3 Gorré533. ‘Book of Songs and Sonnets" என்னும் பெயரில், முதல் ஆங்கிலத் தொகைநூலை வெளி யாக்கினர். இத் தொகைநூலுக்கு, "Tottel's Miscellany' என்ற வேறு பெயரும் உண்டு. இந்தப் பெயர்தான் பின்னர்ப் பெரிதும் நிலைத்துவிட்டது. Misceliany என்ருல், கலவை - கதம்பம் - தொகுதி ஏடு - தொகுப்பு நூல் - என்று பொருளாம் பல்வேறு பாவலர்களின் பல்வேறு பாடல்களே டாட்டல் தொகுத்து வெளியிட்டதால், இந் நூல் Tottel's Misceliany எனப் பெயர்பெற்றது. மிகச் சிறந்ததும், பலரும் அறிந்ததும், பல ஆங்கிலத் தொகைநூல்களுக்கு முன்னேடியானதும் ஆகிய Totte's Miscellany என்னும் இத் தொகைநூலிலுள்ள பாடல்களின் விவரம் வருமாறு :- இதில், வியட் (Wyatt) என்னும் 5