பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 - தமிழ் நூல் தொகுப்புக் கலை பெயரில் ஒரு பெரிய தொகைநூல் ஈந்தார். சுபாஷித ஆவளி = நல்ல பாடல்களின் தொகுப்பு வரிசை, - நீலகண்ட தீட்சிதர், பிாபந்த சாகரர் என்னும் இரு பெயர்களை உடைய ஒர் அறிஞர், பதினைந்தாம் நூற்ருண்டில், வர்ண சார சங்கிரகம்’ என்னும் பெயரில் ஒரு தொகைநூல் உருவாக்கினர். இந்நூல் பல்வேறு குறிக்கோள்கள், பருவங்கள், இடங்கள், கடவுள் கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிச் செல்கிறது. கி. பி. 1412-1477 ஆண்டுக்கால இடைவெளியில் "சிர்வரர்' என்பவர் சுபாவிதாவளி’ என்னும் பெயருடைய நூல் தொகுத்தார். இதில் ஏறக்குறைய நானுாறு புலவர்கள் இடம் பெற்றுள்ளனர். "விஜய சேன சூரி' என்பவர் 1591-இல், 54 பாடல்கள் கொண்ட சுக்தி ரத்நாவளி’ என்னும் தொகைநூல் படைத்தார். இதே பெயரில், ஹேம விஜய கணி’ என்ப வரால் ஒன்றும். "வைத்ய ரத்தா என்பவரால் மற்ருென்று. மாக இரு நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1614-இல், ஹரிதாசர் என்பவர், இருபத்தோர் இயல் களின் கீழ்ப் பல்வேறு தலைப்புக்கள் இட்டு பிரஸ்தாவ -ரத்ந ஹாரம்' என்னும் நூல் தொகுத்துளர். . பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், சுந்தர தேவர் என்பவர். சுக்தி சுந்தரர் என்னும் நூல் தொகுத் தார். இதில், பதிருைம் நூற்ருண்டிலும் பதினேழாம் நூற் ருண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்களும் அக்பர் முதலிய மன்னர்களால் சிறப்பிக்கப் பெற்றவர்களுமாகிய புலவர் களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசார்ய கவீந்திரர் அல்லது கவீந்திரர் என்று அழைக்கப் படும் அறிஞர். கவீந்த்ர சந்த்ரோதயா என்னும் நூல் தொகுத்தார். மற்றும் கவிந்திரர் என்பவர், மிகவும் மதிக்கத்தக்க ஒரு பெரிய தொகைநூல் உருவாக்கியுள்ளார். இதில் ஏறக் சம்சுகிருதத் தொகை நூல்கள் 19; குறைய இருபது இராமாயண நூல்களிலிருந்து பாடல்கள் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு நூல்களிலிருந்தும் பல நாடகங்களிலிருந்தும் அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய பலவகை நூல்களிலிருந்தும் திரட்டிய பாடல்கள் பலவும் இத்தொகை நூலில் அடங்கி புள்ளன. 1753-ஆம் ஆண்டில் 'விரா ஜனதா என்னும் பெரியார் * பத்ய தரங்கிணி என்னும் பெயரில் பெரியதொரு தொகை நூல் உருவாக்கித் தந்துள்ளார். பத்திய தரங்கினி என்ருல், "பாடல்களின் அலைவரிசை என்று பொருளாம். மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து பாடல்கள் தேர்ந் தெடுக்கப் பெற்றுத் தொகுக்கப்பட்டு "காவ்ய சங்கிரக" என்னும் நூல் உருவாகியுள்ளது. இந்நூற் பாடல்கள் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிறந்த பெரியார்கள், சிறந்த பொருள்கள், சிறந்த பண்புகள் பற்றி இப்பாடல்கன் விவரிக்கின்றன. பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், ஹரிகவி என்பவர், "ஹாராவளி’ அல்லது சுபாஷித ஹாராவளி’ என்னும் பெயரில் ஒரு நூல் தொகுத்துளார். இதில், காஷ்மீர் ஆழதல் தக்கணம் வரை உள்ள தொடர்பைக் காட்டும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும், ஹரி பாஸ்கரன் என்பவரின் பத்யா மிருதத் தரங்கிணிை’ என்னும் நூலும், ரூபகோசுவாமி என்பவரின் * பத்யாவளி’ என்னும் நூலும், முகுந்தா என்பவரின் *பத்யாவளி நூலும், வித்யா பூஷணு என்பாரின் பத்யாவளி நூலும், காசிராமா என்பவரின் "பத்ய முக்தாவளி’ என்னும் நூலும், கோவிந்த பட்டா என்பவரின் பத்யமுக்தாவளி’ என்னும் நூலும், கவி பட்டா என்பாரின் பத்யசங்கிரக" நூலும், வேனி தத்ததா என்பாரின் பத்ய வேனி என்னும் நூலும, வடமொழியில் பயனுள்ள தொகைநூல்களாகும். ஆனல், இவை சிறுசிறு தொகைநூல்கள். இவற்றைப் போல