பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் நூல் தொகுப்புக் கலே ப்ெயர்களின் தொகுப்பாயிருப்பதால், அவற்றையும் ஒரு. வகைத் தொகை நூல்களாக நாம் ஒருவாறு எடுத்துக் கொள் ளலாம்- அவ்வளவுதான்! தமிழ் நூல் தொகுப்பு கலை அடுத்து, -இந்த ஆராய்ச்சி நூலுக்குத் தமிழ் நூல் தொகுப்புக் கலை" என்னும் பெயர் பொருந்துமாற்றைக் காண வேண்டும். இந்த பெயரின் இடையேயுள்ள நூல் தொகுப்பு’ என்னும் தொடருக்கு, நூலாகத் தொகுத்தல்” "நூல்களைத் தொகுத்தல்' என இருவகையாகப் பொருள் கொள்ள வேண்டும். அகநானூறு - புறநானூறு போன்றவை பல உதிரிப் பாடல்களே நூலாகத் தொகுத்து உருவாக்கப் பட்டவை யாதலின், இன்னவை, நூலாகத் தொகுத்தல்" ன்ன்னும் பொருளுக்கு உரியன. பதினேராந்திருமுறை. குமர 'குருபரர் பிரபந்தத்திரட்டு போன்றவை, பல நூல்களைத் தொகுத்து உருவாக்கிய திரட்டுக்கள் ஆதலின், இன்னவை, *நூல்களைத் தொகுத்தல்"என்னும் பொருளுக்கு ஏற்றனவாம். இந்த இருவகையான தொகைநூல்களும் நிரம்ப இடம் பெற் றிருப்பதால், இந்த ஆராய்ச்சி நூலுக்கு த், "தமிழ் நூல் தொகுப்புக்கலை’ என்னும் பொதுவான பெயர் தரப்பட்டது. இந்த நூல் தொகுப்பு வேலை, உண்மையிலேயே ஒரு. சிறந்த கலே என்னும் செய்தியை அடுத்துவரும் பகுதிகளில் அறியலாம். இரண்டாம் பாகம் முற்காலத் தொகை நூல்கள்