பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தமிழ் நூல் தொகுப்புக் கலை முதுநாரை, முதுகுகுகு என்னும் நூல்களும் இசைத்தமிழ் பாடல்களின் தொகுப்பு நூல்களாய் இருக்கலாம். 2, களரியாவிரை இனி, இறையனர் அகப்பொருள் உரையில் தலைச்சங்க நூல்கள் என்னும் பெயரில் நான்காவதாகத் குறிப்பிடப்பட் டுள்ள, களரியா விரை' என்னும் நூல் குறித்துச் சிறிது ஆய்வாம். களரி என்பது, களம், நிலம், காடு முதலியன வாக இடப் பொருளைக் குறிக்கும். ஆவிரை என்பது ፴õ வகைப் பூ. எனவே, (களரி -- ஆவிரை=) களிரியாவிரை என்பது, களரியில் பூத்துள்ள ஆவிரம் பூ என்று பொருள் படும். ஆவிரை என்பது நூல் வழக்காற்றுச் சொல்லாகும். நூல் வழக்காறு என்ருல், இன்று நேற்றுத் தோன்றிய நூலில் அன்று. இந்தச் சொல் வழக்காறு, அகநானூறு, குறுந்தொகை கலித்தொகை, பதிற்றுப்பத்து, குறிஞ்சிப்பாட்டு முதலிய கடைச்சங்க நூல்களில் இருப்பதோடல்லாமல், இடைச் சங்க நூலாகிய தொல்காப்பியத்திலும் உள்ளது. இதனை, தொல் காப்பியம் - எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியலில் உள்ள, "பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் கினையுங் காலை அம்மொடு சிவனும்: ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே மெய் அவண் ஒழிய என்மஞர் புலவர்”. (81) என்னும் நூற்பாவால் உணரலாம். இந்நூற்பாவில் பனே, அரை, ஆவிரை என்னும் மூன்று மரவகைப் பெயர்ச் சொற். களுக்குப் புணர்ச்சிவிதி கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர், தமிழில் உள்ள எல்லாச் சொற்களையும் சிறப்பாக எடுத்துக் குறிப்பிட்டுப் புணர்ச்சி விதி கூறிக் கொண்டிருந்தால் கட்டு படியாகாது - காலம் போதாது; எனவே, மக்கள் வழக்கில் மிகுதியாக உள்ள இன்றியமையாத சில சொற்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புணர்ச்சிவிதி கூறியுள்ளார் ஆசிரியர். இதல்ை, அந்தக் காலத்தில் 'ஆவிரை” என்னும் சொல் மக்களிடையே பெரிதும் வழக்காற்றில் இருந்தது. ཝ༔ ༔ , f தொல்காப்பியத்துக்கு முன் · ፲፱ገ என்னும் நுட்பமான செய்தி புலனுகிறது. இந்த அடிப்பண்ட் வுடன் களரியா விரை' என்னும் நூற்பெயருக்கு வருவோம். இந்த நூல், ஆவிரஞ் செடி - கிளே - பூ முதலியவற்றைப் பற்றி விரிவாக விளக்கும் மரவியல் துறை (Botany) நூலாக இருக்க முடியாது. இதற்காக ஒரு தனி நூல் அந்த நாளில் தோன்றியிருக்க முடியாது. காட்டில் மலர்ந்து கண்ணக் கவரும் ஆவிரம் பூக்களின் கொத்தைப்போல, நாட்டில் மலர்ந்து கற்பவரின் கருத்தைக் கவரும் பாடல்களின் கொத்தே - அதாவது - பாடல்களின் தொகுப்பே- களரியா விரை என்னும் நூலாகும். களிற்றியான நிரை, நான் மணிக்கடிகை, திரிகடுகம் முதலிய நூல்களின் பெயர்களைப் போலவே, பூங்கொத்தைக் குறிக்கும் களரியாவிரை' என்னும் பெயரும் உவமையாகு பெயராய் ஒரு நூலக் குறிக்கலாயிற்று. 匈 வழக்காற்றில் மிகுதியாக உள்ள சில சொற்களுக்கு மட்டுந்தான் தொல்காப்பியர் சிறப்பாகக் குறிப்பிட்டுப் புணர்ச்சி விதி கூறமுடியும் என்று முன்னர்ப் பேசிகுேம். ஆம்! தொல்காப்பியப் புணர்ச்சிவிதி பில் இடம் பெற்றுள்ள ஆவிரம்பூ வழக்காற்றில் மிகுதியாக உள்ளதேயாகும். புதுச்சேரித் தெருவில் அடிக்கடி ஆவிரம்பூ விற்பதைக் காணலாம். ஒரு கிழவி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து, ஆவாரம் பூ வாங்கலியா - ஆவாரம் பூ வாங்கலியா? என்று கேட்டு உயிரை வாங்குவாள். எங்கள் வீட்டிலும் அடிக்கடி ஆவிரம் பூக் கூட்டுக்கறி ஆக்குவதுண்டு. ஆவிரம் பூ அடிசிலுக்கே யன்றி, மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இந்தச் செய்தியைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். பெண்கள் ஆவிரம் பூ மாலையைத் தம் மார்பிலே அணிந்து கொள்வர்: அம்மாலை அவர்தம் முலைகளின்மேல் அசைந்தாடிக் கொண்டிருக்கும் என்னும் செய்தியை, 'முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர்பூங் கோதை வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர” . (301) என்னும் அகநானூற்றுப் பாடற் பகுதியால் அறியலாம்.