பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£46 தமிழ் நூல் தொகுப்புக் கை "தொகை என்று சுட்டிக் கூறியிருப்பது, அடுத்தனவாகிய குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்னும் மூனறு நூல்களுங்கூடத் தொகை நூல்களே என்பதைக் குறிப்பாக உணர்த்துவதுபோல் தோன்றுகிறது. இந்த இடைச்சங்க காலத் தொகைநூல்களைப் பற்றி அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். அப் பகுதி வருமாறு : ‘‘...... மூவாயிரத் தெழு நூற்றுவர் தம்மாற் பாடப் பட்ட கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த 2-5u೯ಾ ಸ್ಟ್ರ கதை யுள்ளும் .... பிறவற்றுள்ளுங் கூறினமையானும்...... இந்த உரைப் பகுதியால், கலி, குருகு. Qమె LTGI, வியாழ மாலை, அகவல் என்னும் நூல்கள் செய்யுள்களால் தொகுக்கப்பட்ட இலக்கியங்கள் எனவும். இவற்றை ஆதார நூல்களாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து, பிற்காலத்தில் புலவர்கள் நூல்கள் இயற்றினர் எனவும் அறியலாம். இனி, இறையனர் அகப்பொருள் உரையில் குறிப்பிடப் படாமல், வேறு நூல்களின் வாயிலாக அறியப்பட்டுள்ள இடைச்சங்க காலத் தொகை நூல்களாகிய பன்னிரு பதினறு படலம் என்னும் நூல்கள் குறித்து படலம், ஆராய்வோம். 3. பன்னிரு படலம் நூல் அறிமுகம் : பன்னிரு படலம் என்பது ஒரு தொகை நூல்-இலக்கணத் தொகை நூல். இஃது இதுகாறும் கிடைத்திலது. என்று கிடைக்குமோ? இப்படியொரு நூல் இருந்தது என்பதை, இப்பொழுது கிடைத்துள்ள சில நூல்களின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இறையனர் அகப்பொருள் உரை, புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி யுரை, தொல்காப்பியம் - இளம்பூாணர் உரை, தொல் காப்பியம் - பேராசிரியர் உரை, தொல்காப்பியம் - நச்சிஞர்க் கினியர் உரை, மதுரைக் காஞ்சி - நச்சிஞர்க்கினியர் உரை, மாறனலங்கார உரை, இலக்கண விளக்க உரை, சிவஞான முனிவரின் தொல்காப்பியப் பாயிர விருத்தியுரை முதலிய நூல்களில் பன்னிரு படலம் பற்றிய செய்திகள் பேசப்பட் டுள்ளன. இந் நூல்களிலுள்ள அகச்சான்றுகளைக் கொண்டு பன்னிரு படலத்தின் உண்மையை நம்ப முடிகிறது. பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர், தாம் எழுதிய தொல்காப்பியப் பாயிர விருத்தி உரையிலும், அதே நூற்ருண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகர்,நூலும் உரையுமாகத் தாம் எழுதிய தமது இலக்கண விளக்க உரையிலும் பன்னிரு உடலச் செய்தி பற்றிப் பேசி யிருப்பதால், இந்த நூல் பதினெட்டாம் நூற்ருண்டு வரையும் கிடைக்கப் பெற்று ஆட்சியில் இருந்திருக்கிறது - பின்னரே மறைந்து விட்டது என்பது புலனுகலாம். சிவஞான முனிவர், வைத்திய நாத தேசிகர் ஆகியோர் காலத்தில் பன்னிரு படலம் கிடைக்கப் பெற்று ஆட்சியில் இல்லை; தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக்குறிப்புக் களில் பன்னிரு படலத்தைப் பற்றியுள்ள செய்திகளே அடிப்