பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3. வைத்தியநாத நாவலர் வைத்தியநாத நாவலரென்ற இப்புலவர் பெருமான் தஞ்சாவூர் ஜில்லா வைச் சேர்ந்த நாகப்பட்டினத்திற் கடுத்த திவ்ய க்ஷேத்திரமாகிய கமலாலய மென்ற திருவாரூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இவர் ஸ்ரீவன்மீக நாத தேசிகருடைய குமாரர். இந்த வன்மீக்காத தேசிகர் கவிபாடும் திறத்தில் மிகச் சிரேட்ட ரென்பதற்குச் சிறிதுஞ் சந்தேகமில்லை. இவர், ' தமது பாவன்மையாற் பரிசு பெற்ற சூனாம்பேட்டை மானியமும் உப்பளமும் நாளது வரைக்கும் அவர் சந்ததியார் அநுபவித்து வருகின்றார்கள்," என்று மகா-07-7-ஸ்ரீ சி. வை. தாமோதரம் பிள்ளையவர்க ளெழுதுகிறார்கள். இவ் வாறு தந்தையாருஞ் சிறந்த வித்வானா யிருந்ததனாலன்றோ புத்திரரும் சுபாவ நியமத்தின்படி யாங்ஙனம் தோன்றினர். * இப்போது, மன்னார்குடித் தாலூக் காவைச் சேர்ந்த திருக்களரென்னு மூரில், மிக வயோதிகரா யிருக்கின்ற ஸ்ரீமத் சூரியமூர்த்தி தேசிகரென்பார் நமது வைத்தியநாத நாவலருடைய ஆறாவது சந்ததியாராம். இவர் 17-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 13-ம் நூற்றாண்டின் தொடக் கத்திர பிருந்தவர். இவர் இக்காலத்திலேதா னிருந்தாரென்பதைப் பற்றி வரைந்து சுட்டுவோம். இராமநாதபுரத்தில் கி. பி. 1685-ம் வருஷ முதல் 17 23-ம் வருஷம் வரைக்கும் அரசாண்ட இரகுநாத சேதுபதியின் வாசல் வித்வானாயிருந்த படிக்காசுப் புலவர் நமது நாவலரிடங் கல்வி கற்ற மாணாக்க ராம். ஆகவே நாம் மேலே சொல்லிய காலக் கணக்குத் தவறில்லை யென் 1.து நன்றாய் விளங்கும். படிக்கா ஈப் புலவர் இவருடைய மாணாக்க ரென்பதற்கு ஆதாரமாக, 41 கடடுஞ் சபையிற் கவிவா ரணங்களைக் காளரிபோற் சாடுஞ் சதாசிவ சற்குரு லேமுன் னுன் தந்தைதம்மாற் பாடும் புலவர்க ளானோமின் றிச்செம்மற் பட்டியெங்குங் காஞ்ெ செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்றதுவே,"' 29 என்று படிக்காசுப் புலவரே பாடிய செய்யுளைக் கொள்க. மேலும் நாம் முன்னே ஸ்ரீமத் சூரியமூர்த்தி தேசிகர் இவரது ஆறாவது சந்ததியாராமென்றுகுறித்த விஷயம் மேற்கூறிய காலக் கணக்கை யேகதேசம் வற்புறுத்துகின்றது. வைத்தியநாத நாவலருடைய மதமோ சைவ மதம். இவர் சப்த விடங்க க்ஷேத்திரங்களிலே யதிகப் பிராதாநியத்தை யடைந்த திருவாரூரிலே அபிஷேகஸ்தர் மரபிலே சிறப்புற் றோங்கியவர். இவர் ஓர் அருமையான வித்வானென்று சொல்வதற்கு ஐயமே யில்லை, இவர் மலையாளத்து இராசா, வின் பேரிற் சில பிரபந்தங்கள் பாடி, அவ்விராஜனிட மிருந்து கிராமங்களும், வேறு சில பரிசுகளும் அளிக்கப் பெற்றவர். மேலுமிவர் இலக்கணக் கொத்து

  • இவ்வியா சம் 1892 வருஷத்தில் எழுதப்பட்டதென்பது மணல் கொளத்தகும்,