பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' 455 பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் லானவர்களை யெல்லாம் மூவ தோஹாகியாக்கி விட்டான். பிறகு பிரபோதன் முடி சூட்டப்படுகின்றான், இஃதுடன் காவியம் முடிகின் றது, இதை யெழு தியபோது நாவலர் மனத்திற் குருக்ஷேத்திர யுத்தத்தைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. பிரபந்தத்தின் நடை வெகு நளினமாயும், ஒழுகிய ஓசையோடு கூடியதாயு மிருக்கின் றது. படிக்கும் போதே நிரம்ப இன்பமளிக்கக் கூடியதாகவும் காணப்படுகின் றது. இந்த மாதிரியான பிரபந்தங்கள் நந்தமிழிற் கிடைப்பது மிகவுமருமை. இதிலே * கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுஞ் " சாஸ்திரிமா ருடைய துர்க்குணங்களை மிகுதியும் கண்டிக்கின்றார், மனிதர்களுக்குச் சற்குணாபி விர்த்தி யுண்டாதல் வேண்டுமென்ற நோக்கத்துடனேயே இவரிதை யெழுதி யிருக்கிறாரென்று நினைப்பதற்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. சாஸ் திரிமார்களுடையவே யன் றிப் பற்பல மடங்களிலுள்ள தம்பிரான் களுடைய தீயொழுக்கத்தையும் நன்கு கண்டிக்கிறார். இக்காவியத்திற் காணப்படுகிற ஒவ்வொருவரும் அவரவருடைய குணங்களுக்குத் தக்கபடியே பேசுகிறார் கள், தங்கள் குணங்களோடு சரமஞ்சலப் படாத வார்த்தைகளை யொரு வரும் பேசவேயில்லை. இப்பிரபந்தமானது சில விடங்களிற் பரிகாச நடை . (Sarcastic Style) யோடு எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கவி யும் ஆழ்ந்த நுண்ணிய பொருளை விளக்குகின்றது. பெரும்பாலும் செய் யுட்களெல்லாம் வெகு சுகமாக அமைந்திருக்கின்றன. சமயோசிதமாகப் பதங்களும் பிரயோகிக்கப்பட்டிருக்கின் றன. இவர் செய்யுட்களிற் பாட்டை நிரப்பும் பயனைத் தவிர்த்து வேறு ஒரு யோகமுமில்லாத சொற்களைக் காணு தல் மிகவுமரிது. எதுகை, மோனைகளுக்காகச் சொற்களை விகாரப்படுத்தும் விகாரகுணம் இவரிட மதிகமாகக் கிடையாது. வகையுனி, வனப்பின்மை முதலிய தோஷங்கள் இந்நூலிற் கிடையா. இத்தன்மையான சிறப்பெல்லாம் பற்றியல்லவா, சில காலத்திற்கு முன் இதினின்று மொரு பாகமானது நமது சென்னைச் சர்வகலாசாலையில் பி. ஏ. பரீட்சைக்குப் பாடமாக நியமிக்கப் பட்டது மென்பது யாவர்க்கும் தெரிந்த விஷயம். இனிக் கடைசியாக நமக் கும் நம்முடைய தமிழ்ப் பாஷைக்கும், வைத்தியநாத நாவலர் மூலமாக ஒரு கெளரவம் ஏற்படுகின்றது என்பது எமது துணிவு. -

  • கனஞ்சடை யென்அரு வேற்றிக் கண் மூடிக் கதறுஞ் சாத்திரிகள் பலரின் துர்க்குணம்:--இதைக் க*ணம் பலர், துர்க்குண மென்றே நினைக்கக் கட்டும்; அற் நன்று; வேதத்திற் கூறிய பொருள்களை என்னவெனவறியாது, கனம், சடை என்று, மூல பா...த்தை மாத்திரம், முற்கி, முனைந்து, உருவடித் துத் தமக்கு வேதங்க ளனைத் தும் கைவந்ததாக எண்ணித்தருக்கும் சாத்திரியார்களின், துர்க்குணமொன்றே, ஈண்டுக் கண்டிக்கப்பட்டமையறிக. பொருளை யறிந் து உருவிடுதல் எக்காலத்தும், 'எத்தேயத்தும், எவர்க்கும் நன்மை பயப்பதாம்.