பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) தமிழ்ப் புலவர். சரித்திரம் 459 ) அழகாயமைந்த அநேக உரைச் சூத்திரங்களை எளிதில் விளங்குதற் பொருட் டுச் சேர்த்திருக்கிறார். அவை யெம்போலியர்க்கு மிகப் பயன்படத் தக்கன வாகக் காணப்படுகின்றன. இப்பொழுது யாரேனு மொருவர் 'திராவிட சப்ததத்துவ சாஸ்திரம்', ஒன்று எழுத எண்ணங்கொண்டு எழுதப் புகுந்தால் இந்நூல் மிகப்பிரயோசனப்படுமென்பதற்கு எள்ளளவுஞ் சந்தேகங் கிடை, யாது. திரணதூமாக்கினி மகாருஷி, “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ற" என்று சொன்ன போதிலும், அவ்வந்தகார நீக்கத்திற்கு ஆட்சே பனை சிறிதுமில்லை யென்பது எமது துணிவு. இவ்வந்தணார் சிகாமணி அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணிதீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணங்களை முத ஹலென வுரைப்பர், இவர் வடமொழியில் மகாபாடியம், கையடம், சித்தாந்த கௌமுதி, வாக்கிய தீபம், அரிபீடிகை, தாது விருத்தி, பதமஞ்சரி, சத்த கௌத் துவ முதலிய வியாகாரண சாஸ்திரங்களில் தேர்ந்தவ ரென்பதும், தமிழ் மொழியில், அகத்தியம், தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணப் பயிற் சியும், திருக்குறள், திருக்கோவையார், சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியப் பயிற்சி மிக்குடையவரென்பதும், அவர் மேற்கூறிய ‘ பிரயோக விவேக'த் தூள் எடுத்துக் காட்டாகப் பல இடங்களிலும் மேற்கோள் கூறி யிருப்பதனால் விளங்கும், இப்பிரயோக விவேகமுடையார் வடமொழியிற் சோருகி பரிணயம்' என்னும் நாடகஞ் செய்த இராம பத்திர தீசுஷிதரிடம் இதைப் படித்துக் காட்டி அரங்கேற்றினர் என் 1.1, அது, 4 சீதள சந்த்ர முகராம பத்திர தீக்கிதர்க்குப் போதொடு சென்ற 4.கல்லோ மவர்க்கும் பொழுதில்லையேன் மேதிரி விற்றமிழ் செய்பிர் யோக விவேகம் தன்னைப் பேதமி லாத பதஞ்சலி பாற்சென்று பேசு வமே," என நம் தீக்ஷிதரே கூறியிருக்கின் றமையானும், 41 பேர் கொண்டு நின்றதிர (யோக விவேகத்தைச் சீர்கொண்ட ராமபத்ர தீக்கிதன்றா-னேர் கொண்டு கேட்டா மனிக்கண்ணாற் கேட்கும் 1.பதஞ்சலிதான் கேட்டாலென் கேளாக்கா லென்,” !" எனச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கூறுவதனானுங் காண்க. யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் இந்நூலைப் பதினொரு வருடங்கட்கு முன்னர் அச்சிட்டிருக்கின் றனர். இந்நூலின் பெருமை யுணரவேண்டுபவர் அதன் மூகாரிலகைகளைப் படித்து ஆனந்தமடைவராக, $8