________________
பகுதி) 46 தமிழ்ப் புலவர் சரித்திரம் - 485 அருமையான சில விஷயங்களையும் இவர் விதியிலே தொகுத்திருக்கின்றனர். இனி மூன்றாவதாகிய ஒழிபியலில் பிரயோக விலக்கணமும் அண்மை , தகுதி, அவாய்நிலை, என்பன முதலான தருக்க நூல் சம்பிரதாயங்களும், உ.பசர்க்கம் பிரத்தியயமாகிய இவற்றினிலக்கணங்களும் பொருள்கோளி னிலக்கணங்க ளும் இவைபோல்வன பிறவும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. இவர், * 4 இந் துற்குகாரணத் தொன்னூற் செய்யுளுட் சிலவே யெழுதினம் பளிவே (யெழுதின முலக வழக்கினு ளுணரும் பொருட்டே, என்று தாம் சொல்லிய வண்ணம் உதாரணங்களெல்லாம் உலக வழக்கி னின்றும் எடுத்துக் காட்டிச் சூத்திரங்களை நன்கு விளக்குகின்றார். இனி யிரண்டாவதாகிய "தசகாரியம்' என்னும் பிரபந்தமான து ஒரு ஞான நூல். இஃது சித்தாந்த சைவ மத சம்பந்தமான விஷயங்களை நன்கு விளக்குகின் றதாதலின், இதற்கு விசேஷ மகிமை யேற்பட்டுளது. இது 'பண்டார சாத்திரம்" எனச் சைவர்களால் வழங்கப்பட்டு வருகின்ற பதி னான்கு ஞான நூல்களிற் பதின்மூன்றாவ தாகின்றது. இதில் இவ்வாசிரியர் தமது புத்தி நுட்பத்தை இனிது காட்டியிருக்கின்றார். இக்காலானே நமது தேசிகருடைய சொல்வலிமையும் தருக்கநூற் பயிற்சியும் இனைய வென்று விளங்குகின் றன, இனிப் பொதுப்பட இவருடைய கண்டா சாமர்த்தியமும், வாதஞ் செயும் வன்மையும், இவைபோல்வன பிறவும், ஐரோப்பா கண்டத்திலே 12 - ஆம், 13 - ஆம் நூற்றாண்டுகளிலே “ஸ்கூல்மென் என்று பேர் பெற்றிருந்த ஒருவித சாஸ்திரிமார்களைப்பற்றி யெமக்கு ஞாபகமூட்டுகின்றன. இதனாலே கத்தேசிகோத்தமர்க்கு விசேஷத் தாழ்வு தொனிக்க மாட்டா தென்று கொள்ளுதற்குச் சற்றும் யோசனை வேண்டுவதில்லை. 7. அருணாசல கவிராயர் அருணாசல கவிராயர் என்னும் நாமதேயத்தைப் பெற்ற நம் தமிழ்ப் பாவலர், சோழவள நாட்டின்கண் உள்ள தரங்கம்பாடி யென்ற கடற்கரைப் பட்டினத்திற்கு அருகேயிருக்கின்ற தில்லையாடி யென்னு மூரிலே சாலிவாகன சகாப்தம் 1685-ஆம் ஆண்டிற்குச் சரியான கி. பி. 1712-ஆம் வருடம் பிறந்தவர். நல்லதம்பிப் பிள்ளை யென்ற தந்தைக்கும், வள்ளியம்மாள் என்ற தாய்க்கும் புத்திர பாக்கியமாக ஜனித்தவர் இவர்க்கு மூத்த சகோதரர் மூவர் இருந்தனராமாதலாலும், வேறு உடன்பிறந்தார்க ளில்லையாமா தலாலும், இவர் ' தம் தாய் தந்தையர்க்குக் கடைப் பிள்ளையாயினாராதலின் அதிக அன்பு பாராட்டி வளர்க்கப்பட்டு வந்தார். இவர் தக்க பருவத்திலேயே * வித்தியாரம்பஞ் செய்விக்கப் பெற்றுக் கல்வி கற்றுத் தமக்குப் பன்னிரு