பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு க வுரை

ஆசிரியர் ஓரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், காம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர் தம் குமாரராகிய ஸ்ரீ வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் தமிழ்ப் புலவர் சரித்திரம்' எனப் பெயர் தந்து இந் நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங் களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை முதலிய சில விடயங்களுக்கும், அவர் காலத்தின் பின்னர் வெளிப்பட்ட பல சாசன முதலியவற்றின் துணையானெழுந்த ஆராய்ச்சிகளினாற் போந்த விவரங்களுக்கும் மாறுபாடுகள் காணப்படுதல் வியப்பன்று, இப்பொழுது ஏற்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் முடிவுகளும், இனிப் புதிய சான்றுகள் கிடைக்கப்பெறின், அவற்றானெழும் ஆராய்ச்சிகளால் மாறவேண்டி வரும். இவ்வுண்மையானே, முள் னாராய்ச்சிகளைப் பின்னாராய்ச்சிகளின் முடிவுகள் மறுப்பினும் அதனால் அவைகட்கு உளதாவதோர் இழுக் கொருசிறிதுமின்று. மேலும், முன் னாராய்ச்சி முடிவுகளே பின்ன ரொரு ஞான்று தக்க வா தாரம் பெற்று வலியுற்று நிற்றலும் கூடும். ஆகவே முன்னர் எழுந்த ஆராய்ச்சிகளே இனிப் பின்னர் எழும் ஆராய்ச்சியாளர்க்குப் பெரும் துணைக்கருவியாக நிற்றல் ஒருதலையாம். இன்னோரன்ன காரணங்களால், இந் நூலினையும் உவப்புடன் தமிழுல கம் ஏற்கும் எனக் கருதியே இது வெளியிடப்பட்டது, இதுவேயுமன்றி, ஆசிரியர் தம் .செவ்விய தமிழ் நடை யாவர்க்கும் இன்பமளிக்குமாதலின் இந்நூல் தமிழ் பயிலும் மாணவர்க்குச் சிறந்ததொரு வசன நூலாக அமை தலும் பொருந்துவ தொன்றும். ஆசிரியர், தமிழிற்கு முறைப்படவரைந்த தமிழ்ப் புலவர் சரிதமொன்று இல்லாதது பெருங்குறை வென்பதை நன்குணர்ந்தவராதலின், அக்குறை வினை நீக்குவதெங்வளமென்று பல்லாற்றலுஞ் சிந்தித்திருந்த தொருநலை. அதுபற்றியே, அவர் தமது ஞானபோதினிப் பத்திரிகையில், 'தமிழ்ப் புலவர் சரிதம்' என்ற தலைப்பின்கீழ் இத்தகைய நூலொன் றின் இன்றியமையாமை பைக் குறித்தோர் வியாசமெழுதியுள்ளனர். அவ்வியாசமும், ஈண்டு வரையப் பெற்றுள்ள ஒரு சில புலவர் தஞ் சரிதங்கட்கு முன் பாயிரமாக நிற்றல் எவ் வாற்றானு மேற்புடைத்தென்று கருதி, இம் முகவுரையின் பின்னர் அச்சிடப் 55