பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8. கடிகை முத்துப் புலவர் கடிகை முத்துப் புலவர் என்று பெயர் படைத்த இந்த வித்துவான், திருநெல்வேலி அல்வாவைச் சேர்ந்த சமஸ்தானமாகிய எட்டைய புரத்திற் பிறப்பு வாய்ந்தவர். இவர் இருந்த காலம் 18-ஆம் நூற்றாண்டென்றே கொள்ளப்படும். அஃதெங்:வனம் கொள்ளப்பட்டதெனில், நம்புவவர் அவ் வெட்டையபுரத்தை யரசாண்ட சகவீராம் வேங்கடேசுர எட்டம் நாயக்கரது வாசல் வித்துவானா யிருந்தாராதலின் இவர் அந்நூற்றாண்டுப் புலவரென் றாம். இவர் அவ்வரசனது வாசல் வித்துவானென்றதற்கு அச் சமஸ் தானத்திலேயே கர்ண பரம்பரையாக யாம் கேள்விப் பட்டதும், , * கருப்பஞ் சிலையு மோர்கரமே கண்டே னானுஞ் சூகரமே . காமப் பயலு முட்கரமே கணையைத் தொடுத்தாள் சீக்கரமே வருத்தம் புரிவா ரநேகரமே வல்லார் மடவார் நிசகரமே மாமால் வேங்க டேசுரெட்டன் வருவான் வருவா னென்றிருந்தேன் திருத்தும் படிக்கு மனோகரமே செய்தா னினித்தி வாகரமே தினியில் வருவா யெனக்கரமே தெரிய வுதித்தான் சக்கரமே பொருத்தந் தருங்கண் ணாகாமே போர்வேட் கிலைவீ சாகரமே பூவை மாருஞ் சேகரமே புகழ்ந்தேன் சத்தி னாகரமே," என்ற கவியும் இதுபோன்ற பிற கவிகளும் ஆதாரங்களாகின்றன. 49 இவருடைய கல்வியறிவினைக் குறித்துச் சொல்லுதற்கு மேற்கூறிய கவி யொன்றே தக்க ஆதாரமாம். இவர் செய்த பிரபந்தங்ககொல்லாம் விசேஷ மாக நரஸ்துதியாகவே யிருக்கின்றன. இவராற் செய்யப்பட்டனவாகச் சொல்லிக் கொள்ளும் பிரபந்தங்கள் மூன்று மாத்திரம் அச்சிடப்பட்டிருக் கிள் றன. அவை சமுத்திர விலாசமும், திக்குவிசயமும், திருவிடைமருதூரந்தாதி யும் ஆகும், இனி மேற்கூறிய பிரபந்தங்களின் நயங்களைப்பற்றி யெழுதப் புகுவாம். முதலாவதாகிய சமுத்திர விலாச மென்பது நூறு செய்யுட்கள் அடங்கியது. இதற்குக் கழிக்கரைப்புலம்பல் என்று மற்றொரு நாமமுண்டு. சமுத்திரக்கரை யோரத்திலே இருந்து தலைமகனைப் பிரிந்து ஆற்றாமையால், மன்மதனுடைய பேரிகையாகிய கடலானது உத்கோஷிக்கத் தலைமகள் வருத்தா நிற்றலே யிந்தா லின் எரிஷபமாகும். இதிலேயே இவருடைய கற்பனா சாமர்த்தியமும், சுதந்திர யூகமும் வருணனைத்திறனும் இனிது விளங்குகின்றன. சிற்சில கவிகள் சமுத்தி ரத்திற்கும் அரசனுக்கும் சிலேடையாக அமைக்கப்பட் டிருக்கின்றன. சில செய்யுட்களில் திரிபு மடக்கு முதலிய சொல்லணிகள் இடையிடையே காட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்.நூற் பயிற்சி யொன்றையே கருதி இந்தப் பிரபந்தம் மிகவுங் கொண்டாடப்படுகின்றது.

  • இது சமுத்திர விலாசச் செய்யுள்

60