பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

470' வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் இரண்டாவதாகிய திக்கு விசயம் என்பது திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த ஒரு சிறு சமஸ்தான மாகிய சிவகிரிக்கு அரசனாகிய வரகுண ராம் வன்னியனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு விளங்குகின்றது. இஃது அவ்வரசனுடைய செல்வம், சிறப்பு, அதிகாரம், பராக்கிரமம் முதலிய வற்றை விரித்துக் கூறுகின்றது. இதிலே 320 கவிகளுள. இது சற்று எளிய நடையிலமைக்கப்பட்டுளது. இனி மூன்றாவதாகிய திருவிடைமருதூரந்தாதி கும்பகோணத்திற்கடுத்த திருவிடை மருதூரிலுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்டது. இது அந் தா தி நியமத்திற் சற்றேனும் வழுவாது நூறு பாடல்களாலாகியது. இவ்வந் தாதியி லநேகங்கவிகள் துறைப்பொரு ளமைந்துள்ளன. அந்தாதித் தொடை யும் பாட்டுக்களின் போக்கும் வெகு நேர்த்தியாயிருக்கின்றன. இவர் இப் பிரபந்தத்தைச் செய்ததனாலே யிவரைச் சைவரென்று கொள்ளுதற்கு இட னுண்டு. மேலும் இந்நூலொன்று தான் நம் புலவர் செய்தவற்றுட் கடவுண் மேலது என்று தோன்றுகின்றது. இவர் மேற் கூறிய பிரபந்தங்களைத் தவிர்த்து அநேகர் தனிப்பாக்கள் செய்திருக்கின்றனர். அவை மிகவும் ஆச்சரியகரமாகச் செய்யப்பட்டிருக் கின்றன. அவற்றுட் சிலமடக்கு என்னும் அலங்காரத்தோடும் சிறந்த சப் தார்த்தங்களோடும் விளங்குகின்றன. இத் தனிச் செய்யுட்களை யெல்லாம் தனிப் பாடற்றிரட்டு என்னும் ஓர் அருமையான புஸ்தகத்தில் பாக்கக் காணலாம். * 9. தாமோதரம் பிள்ளை புது நாற்றாண்டு பிறந்த யாவும் இனிது செல்லும் என்றெண்ணி எதிர் பார்த்து நின்ற நந்தந் தமிழுலகம் பெரிதும் துன்புறத்தக்கதோர் நிகழ்ச்சி கேட்டு நடுநடுங்குகின்றது. அந்தோ ! புது நூற்றாண்டு பிறந்த அற்றை நான்றே செந்தமிழுலகிற் செம்மை சான்று விளங்கிய எமது றவ்பஹதூர் - சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துச் சிவபிரான் றிருவடி" நீழலிற் சென்று சேர்ந்தனர். என்னே உலகம்! என்னே வாழ்க்கை !! தமிழ்ப்புலவ ரில்லங்களிற் பனையோலைச் சுவடிகளிற் சிறைப்பட்டுக் கிடந்து தவித்த செந் தமிழணங்கு நல்லாடையுடுத்தத் தெலுங்கு, கன்னட மா திய பாங்கிமாரோடு அச்சுவாகனமேறி நாடெங்கும் உலாவருமாறு" செய்தற்கட் பேரூக்கமெடுத்து உழைத்து நின்ற நம் பிள்ளையவர்கள் காலஞ் சென்றன ரென்பதுணர்ந் த யாவரே தமது அவல மெய்ப்பாட்டினை யடக்க வல்லார்? அவ்வாறாக யாம் எமது துன்பத்தை யடக்கப் புகுதலெவன் ? '

  • இப்புத்தகம் சென்னைப் புத்தகப் பிரசுரகர் ஊ. புஷ்பரதச் செட்டியாரவர், சகளால் அச்சிடப்பட்டு வெளிசயரசி பிருக்கிறது. ஆங்குக் கீண்டு கொள்க.