பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

< Liகுதி): தமிழ்ப் புலவர் சரித்திரம். 47,1, மனத்தின்கணுள்ள துக்கம் வாய்விடுத்துக் கூறுமிடத்துச் சிறிது தணியு மன்றே. அங்ஙனங் கூறுதற்கட் குறை நிகழுமாயினும் உலகம் எம்மைப் பொறுக்க. வாழ் க் ைக நமது தாமோதரம் பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்துச்சித்தார் - வைரவ நாத பிள்ளையவர்களது குமாரர். இவர் கி. பி. 1882 - ஆம் வருடம் பிறந்த னர். ஆண்டுள்ள யாழ்ப்பாணத்துக் கல்லூரியில் ஆங்கிலமும்; சுன்னாகம் முத்துக்குமாரசுவாமி பிள்ளையவர்களிடம் தமிழ்க்கலையும் பயின் றனர். 1852- ஆம் வருடம் அக்கல்லூரியினின்றும் பரீட்சையிற்றேறிப் பட்டம் பெற்று வெளிப் போந்தனர். பின்னர்க் கோப்பாயிலுள்ளதோர் கல்விச் சாலையிற் போதகா சிரியராய் அமர்ந்தனர். அக்காலத்துச் சென்னையில் விளங்கிய டெர்ஸிவல் தரையவர்களால் அழைக்கப்பட்டுச் சென்னைக்குப் போந்து தினவர்த்தமானி யென்றதோர் தமிழ்ப் பத்திரிகையை நாடோறும் பதிப்பித்து வந்தனர். அங்ஙனம் பதிப்பித்தற்கண் நமது பிள்ளையவர்கள் உலகிற்குக் காட்டிய தமிழ் நூற்பயிற்சியும் ஆராய்ச்சி வன்மையும் அவர்க்கு மிக்க புகழ் விளைத் தன. இஃதுணர்ந்த துரைத்தனத்தார் பிள்ளையவர்களை இராசதானிக் கலா சாலையில் தமிழ்ப்பண்டிதராய் அமரும்படி வேண்டிக்கொண்டனர். அங்ஙனம் அக்கலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தி வருபவர் 1857-ஆம் வருஷத்து முதன் முதலில் ஏற்பட்ட சென்னைச் சர்வ கலாசாலைப் பிரவேச பரீட்சையில் தேறினார். பின்னர் அவ்வாறு தேறி நான்கு திங்கள் கழியுமுன், 1858- ஆம் வருடத்தில் நிகழ்ந்த பி, ஏ. பட்டப் பரீட்சையிலுந்தேறினார். எனவே நமது . தமோதரம் பிள்ளையவர்கள் சென்னைச் சர்வகலாசாலையில் முதலிற் பி. எ. பட் டம் பெற்ற இருவருள் ஒருவராவர், பிள்ளையவர்கள் பி. ஏ. பட்டம் பெற்ற வுடன் கள்ளிக்கோட்டைக் கல்விச் சாலையில் உதவி உபாத்தியாயரா யனுப் பப்பட்டனர். ஆண்டிருந்து சென்னைக் கோட்டையில் உயரியதோர் உத்தி யோகத்தி லமர்ந்து பல துரைகளாலும் தமது வாய்மை, நேர்மை, மேற் கொண்ட கடமை தவறாமை ஆகிய நற்குணங்கள் காரண மாகப் புகழப் பெற்று விளங்கி, 1882-ஆம் வருடம் உபகாரச் சம்பளம் பெற்று வேலையி னீங்கினார். இடையில் இவர் கோட்டையில் வேலையிலமர்ந்திருக்கும் டோழ்தே 1871 - ஆம் வருடம் பி. எல். பரீட்சையிலுந் தேறியிருந்தனர். ஆகவே தாம் வேலையினீங்கினவுடனே 1884-ஆம் வருடம் குடந்தையம்பதி யில் நியாயவக்தாவாய் அமர்ந்தனர். அதன்மேற் புதுக்கோட்டைச். சமஸ் தானத்தில் நியாயாதிபதியாயிருந்து உலகிற்கு நன்மை செய்வாராயினர்,.. அக்காலத்தில் அவர்க்கு மகப்பிரிவு நேரிட்டமையின் வேலையை விடுத்துச் , சென்னைக்கு வந்துவிட்டனர்.