பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • தமிழ்ப் புலவர் சரிதம்

உலகின்கணுள்ள நாகரிக நாடுகளில் வழங்கும் பாஷைகளெல்லாம் நன்னிலையிலிருக்கின்றன. அவ்வந் நாடுகளின் நாகரிக விருத்திக்கேற்றவாறு ஆங்காங்குப் பயிலுறுrஉம் பாஷைகளும் விருத்தியடைந்து ஒளி சிறந்து விளக்குகின்றன. அவ்வப்பாஷைகளின் மகிமையுஞ் சிறப்பும் அவ்வப் பாஷைகள் வல்ல புலவர்களாலும் அன்னாரியற்றிய காற்றொகைகளாலும் புலனாம். ஆகவே ஒவ்வொரு பாஷையின் சிறப்பையும் விளக்குங் கருவிகளுள் கலை நின்றது அப்பாவையின் புலவர் சரிதமென்பது துணியப்படும், படவே ஒவ்வொரு பாஷைக்கும் புலவர் சரிதம் வகுக்கப் படுதல் இன்றியமையாத (தொன்றாம்; எனவே புலவர் சரிதமில்வாமை பாஷைக்கே யொரு குறைவாக மதிக்கப்படுதன் மட்டில் நில்லாமல் அப்பாஷை பயின்றோர்க்கும் பயில் வோர்க்கும் உற்றதோர் பெரும் குறையாகவும் மதிக்கப்படுகின்றது. இத்தகைய குறைபாடு நமது தமிழ்மொழிக்கண்ணு முண்டுகொல்? இது விஷயமாக ஆராய்ச்சி செய்தவழித் தோன்றவனயாவை? ஓராற்றால் உற்று நோக்கு மிடத்து இக்குறைபாடு முன்னொரு காலத்திருந்து பின்னர்ச் , சிறிது சிறிதாக நீங்கத் தலைப்பட்டு வாரா நின்றது. சில நூற்றாண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டதாகத் தோன்றுகின்ற 'தமிழ் தாவலர் சரிதை' என்ற தோர் நூலுள் து. அந்நூல் தமிழ் நாவலர்களுட் சிலருடைய சரித்திரங்களைக் கூறுமுகத்தால் அவ்வர் நாவலர்கள் பற்பல வமயங்களிற் பாடிய செய்யுட் களையும் இடையே யெடுத்துரைக்கின்றது. அஃது ஒருவாறு உய்த்தறியு மிடத்துத் தற்காலத்து வெளிப்பட்டுலவும் 'தனிப்பாடற்றிரட்டு' என்னும் நூலையும் போலா தின்றது. இன்னின்ன பாடல்கள் இன்னின்ன சந்தர்ப் பங்களிற் !.ாடப்பெற்றன வென்பது குறிக்கப்பட்டிருத்தலின், தனிப்பாடற் றிரட்டினுந் தமிழ் நாவலர் சரிதை மேதக்கதென்பது தேற்றம், தனிப்பாடற் றிரட்டு இத்தமிழ் நாவலர் சரிதையினுதவி கொண்டே தொகுக்கப்பட்டு மீருக்கலாமென்பது தோன்றுகின்றது. இது நிற்க. யாழ்ப்பாணத்திற் காசி செட்டி யென் பா ரொருவர் தமிழ்ப் புலவர் சரிதத்தைத் தொகுத்து ஆங்கில மொழியிலெழுதிப் பல்லாண்டுகட்கு முன்னர் வெளியிட்டனர். அது நூலாராய்ச்சி முறையைத் தழுவி ஒருவாறு எழுதப்பட்டுளது; அது காலக்கிரமப்படி யெழுதப்படாமை காலவரையறை காண்டலரிதாகிகள் றமை பற்றியே போலும். அதன்கண் நல்லிசைப்புலவர் பல ருடைய சரிதங் காணப்படாமையாற் குன்றக் கூறலென்னுங் குற்றந் தங்குவ தாயிற்று. அதன் பின்னர் யாழ்ப்பாணத்து ஆ. சதாசிவம் பிள்ளை யென்பார் 'பாவலர் சரித்திர தீபகம்' என்றதோர் நூலியற்றிப் பிரசுரித்தனர். அது தமிழ்ப்புலவர் பெயர்களை அகராதிக்கிரமப்படுத்தியெழுதியதோர் தமிழ்வசன நூலாம்; இடை யிடையே அவ்வப் புலவருடைய பாடல்களும் உதாரணமாகக் காட்டப்பட்டன. கால நிர்ணய விஷயத்தில் இந்நூல் அதிக திருப்திகரமான தாயிருக்கவில்லை. இதன்கட் சில அருமையான விஷயங்களும் கூறப்படாமற் போயின, * * ஆசிரியர் ஞானபோதினிப் பத்திரிகையில் ரைந் தது.