பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 தமிழ்ப் பழமொழிகள்

ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை

எடுக்கிற பார்ப்பான் சோறு மேல், 3020 ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல.

(போகிறவனை) ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று

அஞ்சுவானா? ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி

மலத்தின்மேல் விழுவதா? ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்? ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார். 3025

ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன். ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு

யோகந்தான். ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல்

போகிறவன் குந்து காலன். (வருகிறவன்.) ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது.

(போகிறவன் பானையோடு தின்றான்.) ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா? 3030 ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது. ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம். ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம். ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல. ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல. 3035 ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால்

அகப்படுமா? ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப்

பிடித்துக் கரை ஏறலாமா? ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும். ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம்

அனர்த்தம். ஆனையும் ஆனையும் முதுகுரைஞ்ச இடையிலிருந்து கொசு

நசுங்குகிறது. 3040

ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட

கொசுவைப் போல.