பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகள் 131

(முட்டும் போது கொசுவின் கதி என்னாவது?) ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன. ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது.

(ஆனையும் பூனையும்.) ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க

முடியாது. 3045 ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது. ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம். ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு

ஏமாந்து நிற்பானேன்? ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான். ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா? 3.050 ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா? ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி

ஆள முடியாது. ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள். ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா?

(போட்டாற் போல.) ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால்

அஞ்சுவானா? 3055

ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா? ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள்.

(சுளகாலே மறைக்க முடியுமா?) ஆனையைக் குளிப்பாட்ட அண்டா ஜலம் போதுமா? ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல். ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல. 3060 ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா? ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல். ஆனையைச் சுளகால் மறைப்பது போல. ஆனையைத் தண்ணிரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில்

இழுக்குமா? 3065 ஆனையைத் துரத்த நாயா?

(யாழ்ப்பாண வழக்கு.) ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல.

(குடத்துள்.) ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க

முடியுமா? -