பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகள் 133

ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி

கிழிந்து போகும். ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன். 309.5

(சப்பாணி கண்டால் தவழ்வேன்.)

ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற

வேண்டும். ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான். ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே.

(வைணவர் கூற்று.) . ஆன வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான்.

ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு

நிறையாது. 3100

ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே: ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது.

(ஆனை வலம் போனாலும் பூனை வலம் போகக் கூடாது.) ஆனை வாகனம் ராஜ லட்சணம். ஆணைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக்

கொண்ட உயிரும் திரும்பி வரா. 3105

ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல். ஆனை வாயில் போன கரும்பு போல.

(கரும்பு மீளுமா?) ஆனை வாயில் போன விளாம் பழம் போல. ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக்

கரை ஏறலாமா? (பூனை வால் பிடித்துக் கரை ஏறலாமா?)

ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது

என்ன? 31.10

ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன? ஆனை விலை, குதிரை விலை. ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி, ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும். ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம். 31.15 ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம் ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா?