பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இக்கரைக்கு அக்கரை பச்சை. 3130

(இக்கரை மாட்டுக்கு.)

இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல்.

இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழு கொம்பு

வைக்கிறான்.

இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான்.

இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன?

இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு. 135

இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விசுவருப தரிசனம். இங்கு இருந்த பாண்டம் போல.

(இங்கு-பெருங்காயம்.) இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா

வெங்கா? இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக்

காட்டுகிறான். இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு

இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம். 3140

இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது. இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான். இச்சித்த காரியம் இரகசியம் அல்ல,

(அல்லவோ?) இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினிரிங் டிபார்ட்மெண்ட்.

(தெலுங்கு. இச்சிப் பெட்டின வாரிக்கு-கொடுத்து வைத்தவருக்கு.)

இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே, 3.145

இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை.