பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 தமிழ்ப் பழமொழிகள்

இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்? இச்சையும் இல்லை; இருமையும் இல்லை. இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான். 3150 இசை இல்லாப் பாட்டு இழுக்கு.

(இசைவு..)

இசைவில்லாப் பாட்டு இழுக்கு. இசைவு வந்தது வடமலை அப்பா!

(வடமலை-திருப்பதி.) இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத்

தித்திப்பாய் இருக்குமே! (எலுமிச்சம் பழம் போல இனிப்பாய் இருக்கும். வெல்லம் போலப் புளிக்கும்.) இஞ்சி தின்ற குரங்கு போல.

(போலப் பஞ்சரிக்கிறான்.) இஞ்சியில் பாய்ந்தால் என்?ை மஞ்சளில் பாய்ந்தால் என்ன? 8155

இஞ்சி லாபம் மஞ்சளிலே.

இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட.

இட்ட உறவு எட்டு நாளைக்கு: நக்கின உறவு நாலு நாளைக்கு.

(நக்கின-உண்ட)

இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்;வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம்.

இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? 3160

இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது.

இட்ட குடி கெடுமா?

இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது.

இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா?

இட்டத்தில் ஒன்றும் குறையாது. 31.65

(குறைவில்லை.) -

இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ?

(ஏறாசைப் படுகிறதா?) இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை. இட்டது எல்லாம் பயிர் ஆகுமா?பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை. இட்டம் அற்ற முனியன் அட்டமத்துச் சனியன். 器主管翰