பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 தமிழ்ப் பழமொழிகள்

இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்.

இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம்.

இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான்.

இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம். 3200

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

இடம் பட வீடு இடேல்,

(ஆத்தி குடி) இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது. இட மாட்டாதவன் எச்சில் என்றானாம். இட வசதி இல்லாத பதிவிரதை. 3205

இடறின காலிலே இடறுகிறது. இடன் அறிந்து ஏவல் செய். இடாதவனுக்கு இட்டுக் காட்டு. இடான், தொடான். மனுஷர்மேல் செத்த பிராணன்.

இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப்

போகிறேன். 3210

இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது. இடி ஓசை கேட்ட பாம்பு போல.

(நாகம் போல.) இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால்,

குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான். இடிக்கிற வானம் பெய்யாது. இடிக்குக் குடை பிடிக்கலாமா? 3215

இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு

அஞ்சுவானா?

இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல.

இடி சோறு தின்கிறான்.

இடித்த புளி போல் இருக்கிறான்.

இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று

வந்தவளுக்கு இரண்டு. 3220