பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப்பழமொழிகள் 139

இடித்த வானம் பெய்யாது. இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப்

போடுவது போதும். இடிந்து கிடந்த அம்பலம் போல, இடியேறு கேட்ட நாகம் போல.

(இடியேறுண்ட) இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில்

குடியிருக்கல் ஆகாது. 3225

இடி விழுந்த மரம்போல ஏங்குதல். -

இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம்.

இடுகிற தெய்வம் எங்கும் இடும்.

இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால்

என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன? (இடுகிறவள். தன்னவள்.)

இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு

வார்த்தை வரும், 3230

இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும். இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி.

(கைலாசம்.) - இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை. இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு. இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான். 3235

இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே.

இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை.

(இராப் பகல் இல்லை.)

இடும்பும் கரம்பும் அழியும்.

இடும்பைக்கு ஈன்ற தாய் போல.

இடுவது பிச்சை ஏறுவது மோட்சம். 3240

(பெறுவது.)

இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார்.

இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு.

இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா?

(கெடுவார் கெடுப்பதா? கெடுக்காதே.)