பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 தமிழ்ப் பழமொழிகன்

இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி

கொடுத்து நாலாசை தீர்த்தாளாம். இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை. 3.245

இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான். இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ? இடைக் கோழி இராத் தங்குமா? இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி

மருத்துவம் சொன்னாளாம். (மருத்துவம் பார்த்தது போல.)

இடைச்சி ஆத்தாள் தோளிக்கு. 3.250

இடைச்சிக்கு எட்டுத் தாலி, பற்ைச்சிக்குப் பத்துத் தாலி. இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான், இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி. இடை சாய்ந்த குடம் கவிழும். இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே

என்கிறான். 3.255

இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா. இடைப் புத்தி பிடரியிலே.

(இடையன்.) இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ? இடையன் எறிந்த மரம் போல. இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல. 3.260

இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு.

(விடிய விடிய) இடையன் கல்யாணம் விடியும் பொழுது, இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி. இடையன் செய்வது மடையன் செய்யான். இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு

தேடினாற் போல். 3265

இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது.

இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல்.

(சாத்தான் வந்த கதை போல.)