பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகன் 141 '

இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல.

(இடைக்குடி பொறாதது போல.)

இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான், இடையன் வெட்டின கொம்பு போல. 3270

இடையன் வெட்டு அறா வெட்டு. இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை. (ஆண்டி - சிவனடியான், தாதன் . திருமால் அடியான்.) இடையனுக்குப் பிடரியிலே புத்தி. இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ்.

(சாவி.) இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக. $275

(இடை-இடைக்காடர்; கடைவள்ளுவர்)

இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய். இண்டம் பிடித்தவன். - இணக்கம் அறிந்து இணங்க வேண்டும். இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது? இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி. 3280

இணங்கினால் தித்திப்பு: பிணங்கினால் கசப்பு. இணை பிரியா அன்றில் போல.

(பிரிந்த.) இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது?

(ஆகும்?) இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று

எப்படிச் சொல்வது? இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை. 3285

இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்

னான்.

இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்

தாலும் தாண்டுவனே.

இது எமன் ஆச்சே!

இது எல்லாம் பொம்மலாட்டம்.

இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம். 829