பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 தமிழ்ப் பழமொழிகல்

இயற்கை அழகே லேசான ஆபரணம். இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ?

(சேர்க்கை.) இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

(இறக்கப் போனாலும், பரக்கப் போக வேண்டும்.) இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது,

(நெஞ்சு இரும்பு) இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும். 3340

இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல. இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது.

(குட்டியானான்.) இரண்டு ஆட்டில் ஒராடு விழிக்கிறது போல. இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி.

(ஊட்டின.)

இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம். 8345

இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது; இரும்

டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான். இரண்டு ஒடத்தில் கால் வைக்கிறதா?

(கால் வைத்தவனைப் போல.) இரண்டு கண்ணும் பொட்டை: பெயர் புண்டரீகாக்ஷன். இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு. (இரண்டு கையையும் அடித்தால்தான் சத்தம்.) இரண்டு கை போதாது. 3350

இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான். இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு -

புலவர்கள்,இரண்டு தாசிகள், இரண்டு.வைத்தியர்கள்,இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கன். இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?

(ஒடத்தில்.) இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே.

(போட்ட எலும்பு மாதிரி. }

இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது. 3355

இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு

பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு.