பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகள் 145

இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்.

இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்?

இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி?

(கொண்டை என்ன கொண்டை?)

இரண்டும் இரண்டு அகப்பை, இரண்டும் கழன்ற அகப்பை. 3860

இரண்டும் கெட்டான் பேர்வழி. இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி, இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான்.

(கெண்டை ஏறிக் கொட்டானாம். கெண்டை-கெண்டைக்கால்.) இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல. இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை. 8865

இரந்து உண்டவன் இருந்து உண்ணான். இரந்து குடித்தாலும் இருந்து குடி. இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும்.

(யாழ்ப்பாண வழக்கு.) இரந்தும் பருந்துக்கு இடு.

(கொடு.) இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன். 3370

இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா? இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை.

(என்றும்.) இரப்பவனுக்குப் பஞ்சம் என்றைக்கும் இல்லை. இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா?

(வெண் சோறு.) இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. 3375

இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா? இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து.

(யாழ்ப்பாண வழக்கு.) இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை,

நான் கொடுக்கமாட்டேன். இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக

முடையானும் ஆபத்துக்கு உதவா. இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம். 3380

(யாழ்ப்பாண வழக்கு.)