பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 தமிழ்ப் பழமொழிகள்,

இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?

இரவல் சதமா? திருடன் உறவா?

இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.

(இடுப்புச் சிலையை.)

இரவல் சோறு தஞ்சம் தாங்காது.

{தாங்குமா.) இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகக் கட்டு தாலியை. 33.85

இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும்

ஆபக் துக்கு உதவார்.

இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்.

(கொடிய சுகமாம், யாழ்ப்பான வழக்கு.)

இரவல் ஆஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு.

இரவி,முன் பணி போல.

இரவியைக் கண்ட இருள் போல. 33g()

இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல்

இல்லை.

இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே.

(அரவு-ராகு காலம்.) இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும். இரவு உண்ணான் பருத்திருப்பான்.

(அருத்தா பத்தி.) இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு. 3395

இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம்

வேண்டாமா?

இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்.

இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை.

(இராக் கண்ட சனி.)

இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்.

(சூரியன்.) இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை. 3400

இராப்பகல் கண்ணிலே. இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?

(அக விலையைக் குறைத்த கதை.)