பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


j48 தமிழ்ப் பழமொழிகள்

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன்

செவ்வயாய்ச் சிரைப்பான். * (ஒழுங்காய், சரியாய், இருந்தால் தானே.) இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால்

என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? (நம்மவன் ஆனால்.) இருக்கிறவனுக்கு ஒரு வீடு: இல்லாதவனுக்கு அநேக வீடு.

(எங்கும் வீடு.) - இருக்கிறவனுக்கு ஒன்று இல்லாதவனுக்குப் பத்து. இருக்கும் இடம் ஏவுமா, 3430

இருக்கும் போதே இரக்கப் போவானேன்?

இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது.

இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது.

இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும். இரந்து உண்டாலும்

உண்ணும்.

இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி, 3435

இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன, கறுப்பாய் இருந்தால்

என்ன?

இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது.

(இருட்டுள்ளே போனாலும் திருட்டுக் கை போகாது.)

இருட்டிலே குருட்டு ஆண்டி.

இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல.

இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி. 3440

இருட்டுக்கு எல்லாம் சரி, இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம், இருட்டு வீட்டில் குருட்டு ஆனை. இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம். இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது. 3445

(போனாலும், திருட்டுக் கை போகாது.)

இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல; இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல. இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ? இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல், இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள். 3450