பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகள் 151

இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா? இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும். 3495

இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும்.

இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு

அசையுமா?

இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல்.

இரும்புத் தூணைச் செல் அரிக்குமா?

இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? 3500

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

(துரும்பு பிடித்தவன் கையும் கரும்பு பிடித்தவன் கையும்.)

இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும்.

இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது.

இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி.

(எலி தின்றது என்கிறான் இடக்கன்.)

இரும்பை எலி தின்னுமா? 3505

இரும்பை எறும்பு அரிக்குமா? இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு

போகாதா?

சின்ளையை.) இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ? இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம்.

(அவலம்.)

இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது. 3510

இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை.

(இருவரும்.) இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை. இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்? இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே! இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா? 35.15

(ாலிக்குஞ்சு.)