பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 தமிழ்ப் பழமொழிகள்

இவன் ஊராருக்குப் பிள்ளை.

இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டு வான். $570

இவன் புத்தி உலக்கைக் கொழுந்து,

(குந்தாணி வேர்.) இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே

அவிழ்ப்பது அரிது. இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன். இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம். இழந்த சொத்துப் பெரிய சொத்து. 3575

இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு.

இழவுக்கு வந்தவர்கள் எல்லாம் தாலி அறுப்பார்களா?

இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம்.

இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை

இல்லை.

இழவு சொன்னவன் மேலா பழி? 3580

(பேரிலேயா?)

இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும். இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார். இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார். இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி, 3585

இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும். இழுத்து மூட வேணும்.

இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்? இழை ஆயிரம் டொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு. இ ைஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும். 3590

இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி

அடிப்பான். இளங் கன்று பயம் அறியாது.

(இளமறி. }