பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பழமொழிகள் 155

இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா? இளநீர்க் காய் உதிர்க்கிறது போல. 3595

இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம்.

இளமையில் கல்வி எப்போதும் நிற்கும்.

இளமையில் கல்வி சிலையில் எழுத்து.

இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை.

(மிடி.மை.)

இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது. 3600

இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில், இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம். இளமையில் முயற்சி முதுமையில் காக்கும். இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல. இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்? 3605

இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள். இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம். இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி, ஏறி அடித்தானாம்

தவசிப் பிள்ளை. (இடக்கர்.) இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.

(பழமொழி நானுாறு.)

இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு. 为 3610

இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல, இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர். இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார். இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ? இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும். 3615

இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண்.

இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு.

இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை.

இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு

விதைக்க வேண்டும்.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான். 3620