பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-1.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ப் பழமொழிகள்
165
 


ஈன்றோர் நஞ்சில் சான்றோர் இல்லை.

(ஈன்றோரைவிட.)


ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.

ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.

ஈனரை அடுத்தால் மானம் அழியும்.

ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. 3835

(தக்கவும்.)


ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான்.

ஈனனுக்கு இரு செலவு.

ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு

கடுக்காய்.


ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.

(காயாப் புழுங்கல், யாழ்ப்பாண வழக்கு.)