பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

9


அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும்.

அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு. 85

(பா-ம்.) ஒன்பதாம் இடத்தில் ராஜா.

அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்.

அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில்.

(தண்டம் பட்டுக் கணவாய் வடஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ளது.)

அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது?

(பா-ம்.) களவு செய்வான்.

அகப்பை அறுசுவை அறியுமா?

அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி. 90

அகப்பைக்குக் கணை வாய்த்தது போல.

அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?

அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி?

அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே.

அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான். 95

அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.

(பா-ம்.) குறையும்.

அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?

அகம் ஏறச் சுகம் ஏறும்.

அகம் குளிர முகம் மலரும்.

(பா-ம்.) அகம் மலர.

அகம் குறைந்தால் அஞ்சும் குறையும் 100

அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்.

(பா-ம்.) எல்லாம் மலியும்.

அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது.

அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்;

அம்மாளுக்குச் செய்தால் அவமானம்.

அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா.

அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன். 105

(பா-ம்.) அடுத்தகத்துக்காரி சிரிப்பாள்.