பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

11


அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்.

(பா-ம்.)அந்திக் கண்ணன்.

அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன?

அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு.

அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை.

அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா? 130

(பா-ம்.) சொல்லலாகாது.

அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்.

அகமுடையானைக் கொன்ற அற நீலி.

அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது.

அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?

(பா-ம்) ஆடலாமா, ஆட்டம்.

அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்? 135

அகர நாக்காய்ப் பேசுகிறான்.

அகராதி படித்தவன்.

அகல் வட்டம் பகல் மழை.

அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை.

(பா-ம்.) நீண்ட உறவு.

அகல இருந்தால் பகையும் உறவாம். 140

அகல இருந்தால் புகல உறவு.

அகல இருந்து செடியைக் காக்கிறது.

அகல உழுவதை ஆழ உழு,

(பா-ம்.) அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது; அதனையும் அடுக்கு உழு.

அகலக் கால் வைக்காதே. 145

அகல விதை; ஆழ உழு.

அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன்.

அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?

அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை.

அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை.

அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை. 150

அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்.