பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

137


இட்டலிக் குப்பன்.

இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை.

(இட்டவள்-உணவு படைத்தவள்.)

இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?

இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான். 3175

இட்டார்க்கு இட்ட படி.

இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்.

இட்டாருக்கு இட்ட பலன்.

(ஏரி அடித்தார்க்குக் கோடி பலன், ஏறி அடித்தார்க்கு.)

இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன்.

இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும். 3180

இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும்.

இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது.

இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது.

இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை.

(உலகினில் இல்லை, யாரும் இல்லை.)

இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை. 3185

இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு.

இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு.

இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும்.

இடக்கண், வலக்கண்.

இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே. 3190

இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது.

இடக்குக் குடை பிடிக்கலாமா?

இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை.

இடது கை பிட்டத்துக்கு எளிது.

இடது கை வலது கை தெரியவில்லை. 3195

இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை,

(அதனால்தான் அவள் மெத்தப் பதிவிரதை.)