பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ்ப் பழமொழிகள்


(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.

அகா நாக்காய்ப் பேசுகிறான்.

அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது.

அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? 155

அகிலும் திகிலுமாக.

அகோர தபசி வபரீத சோரன்.

(பா-ம்.) நிபுணன்.

அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி.

அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?

அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார். 160

(பா-ம்.) சேர்.

அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை,

(பா-ம்.) அலைசொணாதே. தோஷம் போகாது.

அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது.

அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்.

அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.

அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை. 165

அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள்.

(பா-ம்.) கொத்துமல்லி என்பாள்.

அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே.

(பா-ம்.) அங்காடி விலையை அதறப் பதற அடிக்காதே.

அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே.

அங்காடி நாய் போல அலைந்து திரியாதே.

அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. 170

அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம்.

அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும்.

(பா-ம். )அகப்பைக் கூழ்.

அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்.

அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு.

(பாம்.)அங்கிடு தொடுப்பி - கோள் கூறுபவள்.