பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ்ப் பழமொழிகள்


இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா?

(பட்டணமா?)

இது சொத்தை; அது புழுத்தது.

இது சொத்தை; அது புளியங்காய் போல.

இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை.

இது பெரிய இடத்துப் பேச்சு. 3295

இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி.

(பரிகாரி-வைத்தியன்.)

இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.

இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம்.

இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை.

இந்த உலக வாழ்வு சதமா? 3300

இந்த ஊருக்கு எமனாக வந்தான்.

இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?

இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான்.

இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா?

(கருப்பு-பஞ்சம்.)

இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி. 3305

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?

(இத்தனை திருநாமம்.)

இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும்.

இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா?

இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு.

இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று. 3310

இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?

இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை.

இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?

இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை.

(அப்பா என்று கூப்பிட.)