பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

13


அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது. 175

அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம்.

(பா-ம்.) இங்கே வாடி ஆலாய்ப் பறக்கலாம்.

அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா.

அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.

(பா-ம்.) இருப்பாள்.

அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான்.

அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன். 180

(பா-ம்.) திம்மட்டிராயன்.

அங்கும் சோதி; அடியேனும் சோதி.

(சுவாதித்திருநாளிடம் ஒருவன் சொன்னது.)

அங்குஸ்தி இங்குஸ்தி.

அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்.

அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு.

அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? 185

(பெண் கேட்கப் போனவன் கூறியது)

அங்கே போனேனோ செத்தேனோ?

அங்கேயும் தப்பி இங்கேயும் தப்பி அகப்பட்டான் தும்மட்டிக் காய்ப் பட்டன்.

அங்கை நெல்லிக்கனி.

(ப-ம்.) பழம்.

அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்.

(ப-ம்.) இல்லாதவன்.

அச்சம் ஆண்மையைக் குறைக்கும். 190

(ப-ம்.) குலைக்கும்.

அச்சாணி அன்னதோர் சொல்.