பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ்ப் பழமொழிகள்


(ப-ம்.) போன்றதோர்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?

(அழுவணம்-மருதோன்றி. )

அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்.

(அச்சி-ஓர் ஊர்: சுமத்ராவில் உள்ளது)

அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன். 195

அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல.

அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்.

(பாலக்காட்டு வழக்கு, அச்சி விட்டில் சங்கடம் வந்தால் பிராமணன் புறப்பட வேண்டும்.)

அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?

அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா?

(ப-ம்.) தேர் ஓடுமா? பிள்ளை பிறக்குமா?

அச்சு இல்லாமல் தேர் ஓடாது. 200

(பா-ம்.) ஓடுமா.

அச்சு ஒன்றா வேறா?

அசடு வழிகிறது.

அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்.

அசந்தால் வசந்தா,

அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி. 205

அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே.

அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.

(ப-ம்.) வீட்டுப் பிராம்மணா.

அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்.

அசல் வாழ ஆறு மாசம் பட்டினி.

அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? 210

அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை.