பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தமிழ்ப் பழமொழிகள்


இன்சொல் இடர்ப்படுவது இல்லை.

இன்சொல்லால் இடர் வராது.

இன்சொல்லே ஏற்றம் தரும்.

இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.

இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல. 3670

இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை.

இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம்.

இன்பமும் துன்பமும் இணை விடா.

இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம்.

இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு. 3675

இன்பமும் துன்பமும் பொறுமையிலே.

இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு.

இன்று அற்று இன்று போகிறதா?

இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை.

இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி. 3680

இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும்.

இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.

இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா?

இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு.

இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை. 3685

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான்.

(அறுக்க மாட்டானா?)

இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது.

இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்,

இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை,

இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும். 3690