பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

169


உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.

உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன்.

(யாழ்ப்பாண வழக்கு.)

உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம்.

உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா? 3910

உடும்பு உடும்பே இண்டிக்குப் போ.

(தெலுங்கு, இண்டிக்கு-வீட்டுக்கு.)

உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு.

(உனக்கு இரண்டு நாக்கா?)

உடும்புப் பிடி.

உடும்பு பிடித்தது போதும்; கையை விடு.

உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும். 3915

உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும்.

(கையை விடு.)

உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ?

உடைத்த சட்டி உலைக்கு உதவாது,

உடைத்து ஓடு பொறுக்குகிறான்.

உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா? 3920

உடைந்த சங்கு ஊது பரியுமா?

(பரியுமா.-பரவச் செய்யுமா.)

உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே.

உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?

உடைமை என்பது கல்வி உடைமை.

உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு. 3925

உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

(வெற்றி வேற்கை.)

உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை.

உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.

(பாரா விட்டால்.)

உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும்.

உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை,

உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி.