பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழ்ப் பழமொழிகள்


உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.

(பாராப் பயிர்.)

உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது.

உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது.

(யாழ்ப்பாண வழக்கு, ஜனன மரணப் பதிவு செய்பவன் வராவிட்டாலும் அவன் கைத்தடியை அனுப்பினால் போதும். பொல்-தடி.)

உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம்.

உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?

உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும்.

உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா? 3940

உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?

உண்கிற சோறு வெல்லம்.

(வெள்ளம்.)

உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா?

உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள்.

உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும். 3945

உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு.

(களைப்பு.)

உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும்.

உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல்.

(உடம்பு.)

உண்ட சுற்றம் உருகும்.

உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல். 3950

உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா?

உண்டதுதானே ஏப்பம் வரும்?

உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம்.

உண்ட பிள்ளை உரம் பெறும்.

(உரம் செய்யும்.)

உண்ட பேர் உரம் பேசுவார். 3955

உண்ட வயிற்றுக்கு உபசாரமா?

உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல.