பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ்ப் பழமொழிகள்


அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும்.

அஞ்சினவனைப் பேய் அடிக்கும். 240

(பா-ம்.) அஞ்சினாரை.

அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே.

அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும்.

அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான்.

அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு.

(முதியவர்களைச் சொல்வது)

அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும். 245

அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது.

(பா-ம்.) கோபம் ஆகாது.

அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்.

அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்?

அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி.

அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம். 250

அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை.

அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி.

அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை.

அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார்.

அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும். 255

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்.

அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே.

அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது.

அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும்

(பா-ம்.) அஞ்சும் மூன்றும் அடுக்காக இருந்தால் அறியாச் சிறுக்கியும்.

அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. 260

அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல்.

அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது.