பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ்ப் பழமொழிகள்


உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க.

உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ.

உன் பொங்கு மங்க.

உன்மத்தம் பிடித்தது போல. 4515

உன் மதம் மண்ணாய்ப் போக.

உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று.

(முஸ்லீம் வழக்கு, மஹலூத்-காலக்ஷேபம்.)

உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா?

உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே.

உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும். 4520

(வெளிப்பட்டுப் போச்சு.)

உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும்.

(நாகர்கோயிலில் மண் பிரசாதம்.)

உன் வாயிலே சீதேவி.

உன் வாயிலே மண் விழ.

உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்?

உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம். 4525

உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்.

உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும்.

உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும்.

(அறுத்து. )

உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக.

உன்னை ஒண்டிப் பாடை கட்ட. 4530

உன்னைக் கடலிலே கை கழுவினேன்.

உன்னைக் கேடு அடிக்க.

உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன்.

உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி.

உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்? 4535