பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தமிழ்ப் பழமொழிகள்


ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம்.

(ஏ ஊர்-எந்த ஊர், தெலுங்கு.)

ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.

(கெட்டவனே.)

ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள். 5540

ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம்.

ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல்.

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.

ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை.

ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை. 5545

ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம்.

ஏகாதசி மரணம், துவாதசி தகனம்.

ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா?

ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை.

ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா? 5550

ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல.

ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல.

ஏகாக்ஷி லோக நாசினி.

ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி.

எச்சிலும் பேச்சிலும் வல்லவனே. 5555

ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு.

ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை.

ஏட்டிக்குப் போட்டி, ஏணிக்குக் கோணி.