பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

243


ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும்.

ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். 5645

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்.

ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ?

ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

ஏழை என்றால் மோழையும் பாயும். 5650

ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை.

ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம்.

ஏழைக்குத் தெய்வமே துணை.

(தண்டலையார் சதகம்.)

ஏழைக்கும் மோழைக்கும் இடுதேள் பட்டேனே. 5655

ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை.

(காடுகாள்-துர்க்கை.)

ஏழைக்கு வாழை.

ஏழைக் குறும்பு.

ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது.

ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே. 5660

ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது.

ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல்.

ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.

ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. 5665

(இறைவனே.)

ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?

(வேண்டும்.)

ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?

ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.

ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.

ஏழை வீட்டில் சனீசுவரன் புகுந்த மாதிரி. 5670