பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தமிழ்ப் பழமொழிகள்


ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல.

(ஏறா மடைக்கு.)

ஏறு மாறாய்ப் பேசுகிறதா?

ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். 5715

ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது.

ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல?

ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை.

ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?

ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான். 5720

ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.

ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான்.

ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம்.

ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா?

ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம். 5725

ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம்.

ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே.

ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி.

ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே?

ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல். 5730

(சோர்ந்திருக்கிறாய்.)

ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம்.

ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை.

ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.

(எடுத்துப் பார்ப்பாரும்.)