பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ்ப் பழமொழிகள்


அண்டை அயலைப் பார்த்துப் பேசு.

அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே.

அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல.

(ஆண்டை மேலுள்ள.)

அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.

அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே! 495

அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல.

அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா.

அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே?

அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல.

அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம். 500

அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.

அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?

(அண்டைவிட்டு மீனாட்சிக்கும் அடுத்த வீட்டுக் காமாட்சிக்கும்.)

அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான்.

(திரிப்பான்.)

அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது. 505

(அன்றறுகிற, நின்றறுகிறது.)

அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம்.

(மைத்துனிக்கு.)

அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ?

(எப்போது சாவான்.)

அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு.

(பணச்சு.)

அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது.

(அரைஞாண் கயிற்றுக்குச் சரி.)

அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ. 510

அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி.

அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம்,