பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ்ப் பழமொழிகள்



அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்.

அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ.

அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்.

(அண்ணாதுாரில் பிணத்தாழி கட்டித் தொங்க விட்டிருப்பார்களாம். சதண்டி: ஓரூர்.)

அண்ணாமலைக்கு அரோ ஹரா!

அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம். 540

அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?

(மன்னார்சாமியைக் கேட்பானேன்? மன்னார்சாமி மருள் வந்து.)

அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை.

அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் படிக்க வேண்டுமா?

(படிக்கத் தெரியாதா?)

அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்.

அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது. 545

அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்.

அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை.

(அண்ணாவி-உபாத்தியாயர், அடைமுறை.)

அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை.

அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்.

(மோளுதல்-சிறுநீர் கழித்தல்.)

அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா? 550

அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு.

அண்ணாவுக்கு மனசு வரவேணும்; மதனி பிள்ளை பெற வேணும்.

அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு.

அணி இலாக் கவிதை பணி இலா வனிதை.

அணி எல்லாம் ஆடையின்பின். 555

(பழமொழி நானூறு.)

அணி பூண்ட நாய் போல.

அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது.