பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

37


அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம்.

அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம். 770

அபாயத்திற்கு உபாயம்.

அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா?

அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான்.

அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா?

அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா. 775

(குறும்பும், அம்பட்டக் கிருதாவும், போகாது. அடடா சொல்லவா?)

அம்பட்ட வேலை அரை வேலை.

அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும்.

(அத்தனையும் மயிர்.)

அம்பட்டன் கைக் கண்ணாடி போல.

அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும்.

அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல. 780

அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?

(பஞ்சமா?)

அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.

அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா?

அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல.

அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும். 785

(வந்தால் அடைப்பம் சரியாய் இருக்க வேணும்.)

அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா?

அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல.

அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி,

(அம்பத்தூர்-மதுரை மாவட்டத்தில் உள்ளதோர் ஊர்.)

அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன?

(அம்பர்-அம்பர் மாகாளம்.)

அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன? 790

(அரண்மனையில் இருந்தால் என்ன?)

அம்பலத்தில் அவல்பொரி போலே.

அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்.

(அமுது அடக்கம் பண்ண.)